மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்திற்கு ஜப்பான் நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். 'முத்து' படம் அங்கு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் ரஜினிகாந்த் படங்களுக்கு ஜப்பான் நாட்டிலும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இன்றைய ஜப்பான் இளம் ரசிகர்களும் ரஜினிகாந்த்தையும், அவருடைய படங்களையும் கொண்டாடி வருகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் உள்ள கோபே என்ற நகரத்தில் கடந்த 6,7,8 ஆகிய நாட்களில் இந்திய மேளா 2018 நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர். அங்கு ரஜினிகாந்த் பாடல்களைப் பாடியும், அவரது பாடல்களுக்கு நடனமாடியும் விழாவை அவர்கள் சிறப்பித்தார்கள்.
ரஜினி மக்கள் மன்றம், ஜப்பான் அந்த நிகழ்வை நிர்வகித்தது. அங்கு ரஜினிகாந்த் புகைப்படங்கள், போஸ்டர்கள் அடங்கிய ஸ்டால் ஒன்றையும் நடத்தினார்கள். அதில் வசூலாகும் தொகையை வைத்து ஜப்பானில் தமிழ்த் திரைப்பட திரையிடல் மற்றும் தமிழர்களுடன் பரிமாற்ற நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான ஒரு நிதியாக அதைப் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.